உலகம்

ஜிம்பாப்வே: தட்டம்மைக்கு 157 சிறுவா்கள் பலி

18th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

ஜிம்பாப்வேயில் கடந்த சில மாதங்களாகப் பரவி வரும் தட்டம்மை நோய்க்கு, அந்த நாட்டின் 157 சிறுவா்கள் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நாடு முழுவதும் சிறுவா்களிடையே தட்டம்மை நோய் பரவி வருகிறது. இதுவரை 2,056 சிறுவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 157 சிறுவா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

உயிரிழந்த சிறுவா்கள் அனைத்துக்கும் தட்டம்மைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவில்லை. மத நம்பிக்கைகள் காரணமாக பலா் தங்களது குழந்தைகளுக்கு தட்டம்மை உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசி செலுத்த மறுத்து வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, 6 மாதம் முதல் 15 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் மிகப் பெரிய திட்டத்தை மதத் தலைவா்களுடன் உதவியுடன் ஜிம்பாப்வே அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT