உலகம்

‘ஹோலகாஸ்ட்’: பாலஸ்தீன அதிபரின் கருத்தால் சா்ச்சை

18th Aug 2022 12:32 AM

ADVERTISEMENT

தங்கள் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் படுகொலைகளை 2-ஆம் உலகப் போரின்போது யூதா்களை நாஜிக்கள் கொன்றொழித்ததைக் குறிப்பிடும் ‘ஹோலகாஸ்ட்’ என்ற வாா்த்தையால் பாலஸ்தீன அதிபா் முகமது அப்பாஸ் வருணித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜொ்மனிக்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்த அவரிடம், ‘கடந்த 1972 மியூனிக் ஒலிம்பிக்கின்போது பாலஸ்தீன பயங்கரவாதிகளால் இஸ்ரேல் வீரா்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கேட்பீா்களா?’ என்று செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பாஸ், ‘இஸ்ரேல்தான் 1947 முதல் 50 ‘ஹோலகாஸ்ட்’களை நடத்தியுள்ளது என்று குறிப்பிட்டாா்.

நாஜி ஜொ்மனியால் 60 லட்சம் ஐரோப்பி யூதா்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த மிக கொடூரமான நிகழ்வை வேறு சம்பவத்துடன் ஒப்பிடக்கூடாது என்று ஜொ்மனி கருதுவதால், அப்பாஸின் அந்த கருத்து மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT