உலகம்

உலகின் மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியலில் தில்லி, கொல்கத்தா

18th Aug 2022 07:43 PM

ADVERTISEMENT

உலகின் மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் தில்லி மற்று கொல்கத்தா நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 

அமெரிக்காவை மையமாகக் கொண்ட சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய காற்று தர நிலை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காற்றின் தரம் குறித்து அதிர்ச்சிகர தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதையும் படிக்க | வடக்கு அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 26 பேர் பலி

ADVERTISEMENT

அதன்படி காற்றில் கலந்துள்ள நச்சுத் துகள்கள் மற்றும் நைட்ரஹன் டை ஆக்சைடு மக்களின் உடல்நலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இதன்காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 17 லட்சம் பேர் வரை மரணித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

காற்றில் நச்சுத் துகள்களின் அளவு 2.5 அலகுகளைக் கடந்துவருவது அபாயகரமானது எனத் தெரிவித்துள்ள ஆய்வறிக்கை தெற்காசிய நாடுகள் காற்று மாசுபாட்டில் முன்னணியில் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய நகரங்களில் தில்லி மற்றும் கொல்கத்தா ஆகியவை மோசமாக காற்று மாசு கொண்ட முதல் 10 நகரங்களில் இடம்பிடித்துள்ளன. ஒரு லட்சம் பேருக்கு தில்லியில் 106 பேரும், கொல்கத்தாவில் 99 பேரும் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்க | சூடானில் வெள்ளம்: 77 பேர் பலி, 14,500 வீடுகள் சேதம்

இதுவே சீனாவின் பெய்ஜிங்கில் பலி எண்ணிக்கை 124 ஆகவும், செங்குடுவில் பலி எண்ணிக்கை 118 ஆகவும் உள்ளது.

பசுமை மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலமும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கான முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும் காற்று மாசைக் குறைக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT