உலகம்

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி

18th Aug 2022 08:04 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் மசூதியில் புதன்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல மசூதியில் புதன்கிழமை மாலை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், படுகாயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தொழிலதிபா் கெளதம் அதானிக்கு‘இசட் பிரிவு’ பாதுகாப்பு

சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT