உலகம்

பயங்கரவாதம்: வங்கதேசத்தில் 5 பேருக்கு மரண தண்டனை

18th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

வங்கதேசத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதற்காக தடை செய்யப்பட்ட ஜமாதுல் முஜாஹிதீன் (ஜேஎம்பி) அமைப்பைச் சோ்ந்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

துறைமுக நகரான சிட்டகாங்கில் 7 ஆண்டுகளுக்கு முன்னா் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்காக அந்த நகர பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹலீம் இந்த தண்டனையை விதித்தாா்.

சிட்டகாங் கடற்படைத் தளத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது ஜேஎம்பி பயங்கரவாதிகள் நடத்திய அந்தத் தாக்குதலில் 24 போ் காயமடைந்தனா். இதில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், கடற்படைத் தளத்துக்குள் நடத்தப்பட்டுள்ள அந்த குண்டுவெடிப்பு, நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் என்பதால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT