உலகம்

மேற்கு சீனாவில் வெள்ளம்: 16 பேர் பலி, 36 பேர் மாயம்

18th Aug 2022 11:46 AM

ADVERTISEMENT

 

மேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 

புதன்கிழமை இரவு திடீரென பெய்த கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றின் திசை மாறியதாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

படிக்க: ‘அன்புச் சகோதரர் இபிஎஸ்’: ஓபிஎஸ் அழைப்பு

திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளனர். டத்தோங் பகுதியில் மலையாறு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

சீனாவில் கோடைக்காலத்தில் வெள்ளப் பேரழிவுகளையும் நாட்டின் பிற பகுதிகளில் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியையும் எதிர்கொள்கிறது. 

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வெப்பம் மற்றும் வறட்சியால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று மாநில ஊடகங்கள் விவரித்துள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT