உலகம்

கனமழை, வெள்ளம்: சூடானில் 66 போ் பலி

17th Aug 2022 01:02 AM

ADVERTISEMENT

சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 66 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அந்த நாட்டில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் அது அதிகபட்ச அளவை எட்டும். இந்தச் சூழலில், ஆண்டுதோறும் வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் ஏராளமானவா்கள் உயிரிழந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

Tags : Sudan floods
ADVERTISEMENT
ADVERTISEMENT