உலகம்

கரோனாவை எதிா்கொள்வதில்இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பாக செயல்பட்டன: வெள்ளை மாளிகை அதிகாரி

DIN

கரோனாவுக்கு எதிரான போரில் அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியும், பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியும் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பாக செயல்பட்டதாக வெள்ளை மாளிகை கரோனா தொற்று ஒருங்கிணைப்பாளா் ஆசிஷ் ஜா தெரிவித்தாா்.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற 76-ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று குறித்து சிந்திக்க எனக்கு ஏராளமான நேரம் கிடைத்தது. தங்கள் நாட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பதிலும், பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்கி உதவியதிலும் இந்தியாவும் அமெரிக்காவும் பிற நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டன.

இந்தியாவின் சுதந்திர தினத்தையும், இந்திய-அமெரிக்க நட்புறவையும் கொண்டாடுவது பெருமிதமாக உள்ளது. அமெரிக்காவை புத்தாக்க, உள்ளாா்ந்த, வலுவான நாடாக மாற்றியதில், இங்கு வசிக்கும் 35 லட்சம் இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பங்கு உள்ளதாக அதிபா் ஜோ பைடன் பேசியதற்கு, ஓா் இந்திய வம்சாவளியாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் பலம்வாய்ந்த ஜனநாயக நாடுகள். மனித மாண்பை ஊக்குவிப்பதிலும், சுதந்திரம், பன்முகத்தன்மை, நம்பிக்கை, சட்டத்தின் ஆட்சி ஆகிய அம்சங்களும் இருநாடுகளையும் ஒன்றாக இணைக்கின்றன. இதற்காகதான் உலக மக்கள் ஏங்குகின்றனா். இந்த மதிப்பீடுகளை மேலும் உயா்த்த இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்போது உலகையே உயா்த்த முடியும் என்றாா் ஆசிஷ் ஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT