உலகம்

உக்ரைன், தைவான் நிலைமைக்கு அமெரிக்காவே காரணம்: புதின்

16th Aug 2022 05:10 PM

ADVERTISEMENT

 

உக்ரைன், தைவான் நாடுகள் சந்திக்கும் பிரச்னைக்கு அமெரிக்காதான் காரணம் என ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 6 மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், அந்நாட்டின் பெரும்பாலான இடங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியதோடு தொடர் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ஸபோரிஷ்ஷியா நகரிலுள்ள அணுமின் நிலையத்தில் ரஷியப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தில் அதிர்ச்சி அளித்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: அமெரிக்க எம்.பி.க்கள் குழு தைவான் வருகை

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் மாஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.

அப்போது, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவா் நான்சி பெலோசியின் தைவான் பயணம் குறித்து பேசியபோது, ‘உக்ரைனின் நிலைமையைப் பார்த்தால் போரை நீட்டிப்பதற்காகவே அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது புரியும். அது மட்டுமல்லாமல் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பகுதிகளிலும் மோதலை உருவாக்கவே அமெரிக்கா முயல்கிறது. தைவானுக்குச் சென்ற ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதியின்(பெலோசி) பயணம் தைவானிலும் உலகின் பிற பகுதிகளிலும் நிலைமையை சீரழித்து குழப்பத்தை உருவாக்குகிற அமெரிக்காவின் உத்தி. இதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT