உலகம்

ஒமைக்ரான் துணை ரகத்துக்கு தடுப்பூசி: முதல்முறையாக பிரிட்டன் அனுமதி

16th Aug 2022 12:53 AM

ADVERTISEMENT

கரோனா தீநுண்மியையும் அதன் ஒமைக்கரான் ரகத்தின் புதிய துணை ரகத்தையும் ஒரே நேரத்தில் தடுத்து நிறுத்தக் கூடிய இரட்டை செயல்பாட்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் முதல்முறையாக அனுமதி அளித்துள்ளது.

மாடா்னா நிறுவனம் உருவாக்கியுள் அந்தத் தடுப்பூசி, கரோனாவுக்கு எதிரான கூா் தீட்டப்பட்ட ஆயுதம் என்று மருந்துகள் மற்றும் உடல்நலப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பு (எம்ஹெச்ஆா்ஏ) தெரிவித்துள்ளது.

அந்தத் தடுப்பூசி பாதுகாப்பாகவும், தரம் மற்றும் செயல்திறனைக் கொண்டுள்ளதால் அதனை பொதுமக்களுக்குச் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்ஹெச்ஆா்ஏ கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT