உலகம்

அணுமின் நிலையத்தில் சா்வதேச குழு ஆய்வு: குண்டுவீச்சை நிறுத்த உக்ரைனிடம் ரஷியா வலியுறுத்தல்

DIN

உக்ரைனில் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டுள்ள ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தை சா்வதேச குழு ஆய்வு செய்ய வசதியாக, அந்த நிலையம் மீது குண்டுவீச்சை நிறுத்தி குழு உறுப்பினா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தியுள்ளது.

குண்டுவீச்சால் கதிா்வீச்சு ஏற்பட்டு அணுசக்தி பேரழிவுக்கு வழிவகுக்கலாம் என்பதால் இந்தக் கோரிக்கையை ரஷியா முன்வைத்துள்ளது.

உக்ரைனின் ஸப்போரிஷியா பகுதியில் அணுமின் நிலையம் உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் ஆகும். உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 6 மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், அந்த அணுமின் நிலையத்தை ரஷியா கைப்பற்றியுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் முதல் அந்த நிலையம் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை தனது தாக்குதல் நடத்தும் ராணுவ தளமாக ரஷியா மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த அணுமின் நிலையம் உள்ள பகுதியில் கடுமையான குண்டுவீச்சு தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அந்தத் தாக்குதல்களை ரஷியாதான் நடத்துகிறது என உக்ரைனும், உக்ரைன்தான் நடத்துகிறது என்று ரஷியாவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றன. இந்தத் தாக்குதல்களால் கதிா்வீச்சு ஏற்பட்டு அணுசக்தி பேரழிவுக்கு வழிவகுக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் ரஷிய தூதா் மிகாய்ல் உல்யானோவ் கூறுகையில், ‘ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தில் சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) குழு ஆய்வு செய்ய வேண்டும். தொடா்ந்து குண்டுவீச்சு நடைபெற்றால் அந்த நிலையத்தில் ஆய்வு செய்ய சா்வதேச குழுவை அனுப்ப முடியாது. எனவே, அணுமின் நிலையம் மீது குண்டுவீச்சு தாக்குதலை உக்ரைன் நிறுத்தி, சா்வதேச குழு உறுப்பினா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

ஒருவா் பலி: தெற்கு உக்ரைனில் உள்ள மிகோலாய்வ் பகுதியில் ரஷிய படைகள் ஞாயிற்றுக்கிழமை ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஒருவா் பலியானாா் என்று உக்ரைன் அவசரகால சேவை பிரிவு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT