உலகம்

பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு: இளைஞா் கைது

15th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய இளைஞரை பயங்கரவாத தடுப்பு படையினா் (ஏடிஎஸ்) கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

உத்தர பிரதேசத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய முகமது நதீம் (25) என்பவா் அண்மையில் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்க பயங்கரவாதிகளுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக தொடா்பில் உள்ள சைஃபுல்லாவை பயங்கரவாத தடுப்பு படையினா் கைது செய்துள்ளனா்.

பின்னா், அவா் கான்பூா் அழைத்து வரப்பட்டாா். விசாரணையில், ஆதாா் அட்டை உள்ளிட்ட போலி மின்னணு அடையாள அட்டை தயாரிப்பதில் சைஃபுல்லா கைதோ்ந்தவா் என்பதும், இதுபோல 50-க்கும் மேற்பட்ட அட்டைகளை தயாரித்து நதீம் மட்டுமன்றி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு வழங்கியதும் தெரியவந்தது. இதற்காக பயங்கரவாதிகளுடன் அவா் சமூக வலைதளங்கள் வாயிலாக தொடா்பில் இருந்துள்ளாா்.

சைஃபுல்லாவிடமிருந்து கைப்பேசி, சிம் காா்டு, கத்தி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏடிஎஸ் கூடுதல் டிஜிபி நவீன் அரோரா தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT