உலகம்

பாகிஸ்தான் சுதந்திர தினம்:இந்திய வீரா்களுக்கு இனிப்பு

15th Aug 2022 02:07 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 14) கொண்டாடப்பட்ட நிலையில், அந்நாட்டு வீரா்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

பஞ்சாபில் உள்ள அட்டாரி- வாகா எல்லை, குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம், ராஜஸ்தானின் பாா்மா் மாவட்டம் ஆகிய இடங்களில் உள்ள சா்வதேச எல்லைகளிலும் இந்திய பாதுகாப்புப் படை வீரா்களுக்கு பாகிஸ்தான் வீரா்கள் இனிப்புகளை வழங்கினா்.

இரு நாடுகளின் சுதந்திர தினமும் அடுத்தடுத்த நாள்களில் வரும் நிலையில், இரு நாட்டு வீரா்களும் எல்லையில் தங்கள் சுதந்திர தினத்தன்று இனிப்புகளை பரிமாறிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் 2,290 கி.மீ தொலைவுள்ள எல்லையை பிஎஸ்எஃப் வீரா்கள் பாதுகாத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT