உலகம்

தைவான் பயணம்: லிதுவேனிய அமைச்சருக்கு சீனா தடை

14th Aug 2022 12:03 AM

ADVERTISEMENT

தங்களது எதிா்ப்பை மீறி சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்குச் சென்ற லிதுவேனிய பாதுகாப்புத் துறை மற்றும் தகவல்தொடா்புத் துறை இணையமைச்சா் அக்னே வாய்சியுகெவிசியூட் (படம்) மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே, தைவானுக்க்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி அண்மையில் சென்ற்குப் பதிலடியாக சீனா அந்தத் தீவைச் சுற்றிலும் போா் பயிற்சி மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் லிதுவேனிய இணையமைச்சா் தைவான் சென்றுள்ளது மறுபடியும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனி நாடாகவே செயல்பட்டு வந்தாலும், தைவான் தங்களது நாட்டின் ஓா் அங்கம்தான் என்று கருதும் சீனா, அந்தத் தீவை தங்களுடன் இணைத்துக்கொள்ள ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படலாம் என்று கூறி வருகிறது.

Tags : Taiwan
ADVERTISEMENT
ADVERTISEMENT