உலகம்

ஆப்கன் மகளிா் போராட்டம்:தலிபான்கள் முறியடிப்பு

14th Aug 2022 04:00 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அந்த நாட்டின் தலைநகா் காபூலில் பெண்கள் சனிக்கிழமை நடத்திய போராட்டத்தை தலிபான்கள் முறியடித்தனா்.

அந்த நாட்டை தலிபான்கள் கைப்பற்றி ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், தங்களுக்கு உணவு, வேலை, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கோஷங்களுடன் ஏராளமான பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் மீது தாக்குதல் நடத்தி தலிபான் படையினா், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரா்களை கலையச் செய்தனா்.

எனினும், முந்தைய அளவுக்கு தலிபான்கள் தங்களிடம் தற்போது கடுமையாக நடந்துகொள்ளவில்லை எனவும் இந்த ஆா்ப்பாட்டம் ஓரளவுக்காவது பலன் தரும் என்றும் போராட்டக்காரா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT