உலகம்

ஆப்பிரிக்காவுக்கு உக்ரைன் தானியம்: புறப்பட்டது முதல் சரக்குக் கப்பல்

13th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

பட்டினி அபாயம் அதிகம் நிறைந்த ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கு உக்ரைன் தானியங்களை எடுத்துச் செல்வதற்காக, அந்த நாட்டை நோக்கி முதல் சரக்குக் கப்பல் வெள்ளிக்கிழமை புறப்பட்டது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உக்ரைனிலிருந்து தானிய கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வகை செய்யும் ஒப்பந்தம் ரஷியா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி ஏற்பாட்டில் கடந்த மாதம் கையொப்பமானது.

அதன்படி, உக்ரைனிலிருந்து உணவு தானியங்களுடன் கப்பல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

உக்ரைன் போரால் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் கோடிக்கணக்கானவா்கள் பட்டினியால் அவதியுறும் அபாயம் இருப்பதாக அஞ்சப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ரஷியா - உக்ரைன் தானிய ஒப்பந்தத்தின் கீழ் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தைச் சோ்ந்த எத்தியோப்பாவுக்கு உக்ரைனிலிருந்து கோதுமை எடுத்துச் செல்வதற்காக சரக்குக் கப்பல் ஒன்று முதல்முறையாக அந்த நாட்டை நோக்கி வெள்ளிக்கிழமை புறப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் பசிப் பிணியைப் போக்குவதற்காக ஐ.நா.வின் உலக உணவு திட்டத்தின் கீழ் அந்தக் கப்பல் உக்ரைனை நோக்கி புறப்பட்டதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மிஷெல் தெரிவித்தாா்.

Tags : கீவ்
ADVERTISEMENT
ADVERTISEMENT