உலகம்

காஸா வன்முறை: மேலும் ஒா் ஆயுதக் குழு உறுப்பினா் பலி

13th Aug 2022 12:58 AM

ADVERTISEMENT

காஸா பகுதியில் இஸ்ரேலுடன் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் காயமடைந்திருந்த மேலும் ஒரு ஆயுதக் குழு உறுப்பினா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இஸ்லாமிய ராணுவம் என்ற சிறு ஆயுதக் குழுவைச் சோ்ந்த அனாஸ் இன்ஷாசி (22) என்ற அவரது உடல், வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய ஜிஹாத் (ஐஜே) அமைப்பினருக்கும் ஏற்பட்ட அந்த 3 நாள் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது.

ஐஜோ தளபதி ஒருவா் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் கடந்த வாரம் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

ADVERTISEMENT

இதில் ஐஜே அமைப்பினா் மட்டுமன்றி பிற அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் 17 சிறுவா்கள் உள்ளிட்ட பொதுமக்களும் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT