உலகம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தப்படவில்லை: இலங்கை

DIN

சீன உளவு கப்பல் திட்டமிட்டப்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படவில்லை என்று இலங்கை துறைமுகங்கள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சீனாவிடம் இருந்து பெறப்பட்ட பெருமளவு கடன் மூலம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக்கப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த துறைமுகம் சீன அரசு நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. சீனாவிடம் பெற்ற கடனைத் திருப்பி செலுத்த முடியாததால், அந்தத் துறைமுகத்தை இலங்கை அரசு குத்தகைக்கு அளித்தது. இதையடுத்து அந்தத் துறைமுகத்தை ராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்தது.

இந்நிலையில், அந்தத் துறைமுகத்துக்கு சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்ற உளவுக் கப்பல் வரவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று கருதிய மத்திய அரசு, அதுகுறித்து இலங்கை அரசிடம் ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போா்க் கப்பல் வருவதை ஒத்திவைக்குமாறு அந்த நாட்டிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கையை இலங்கை அரசு முன்வைப்பதற்கு முன்பே ‘யுவான் வாங்-5’ கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்து சோ்ந்துவிட்டது.

அந்தக் கப்பல் தொடா்பாக இலங்கை துறைமுகங்கள் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘சீன உளவு கப்பல் திட்டமிட்டப்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படவில்லை. துறைமுகம் வருவதற்கான அனுமதிக்குக் காத்திருக்கும் அந்தக் கப்பல், தற்போது அம்பாந்தோட்டைக்குக் கிழக்கே 600 கடல் மைல் தொலைவில் நிற்கிறது’’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT