உலகம்

அழிவுப்பாதையில் அமேசான் காடுகள்:7 சதவிகிதம் அதிகரித்த காடழிப்பு

13th Aug 2022 06:53 PM

ADVERTISEMENT

பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளின் பரப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 சதவிகிதம் அதிகமாக அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள் உலகின் முக்கிய இயற்கை சூழ்மண்டலமாக உள்ளது. இங்கு பல்வேறுபட்ட பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்த மழைக்காடுகளின் பரப்பளவு அழிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இதையும் படிக்க | கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கூடாது: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆய்வு தரவுகளின்படி அமேசான் காடுகளின் பரப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு 7.3 சதவிகிதம் அழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

செயற்கைக் கோள் தரவுகளின்படி 5,474 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது நியூயார்க் நகரத்தைப் போல் ஏழு மடங்கு அதிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி

தேசிய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்தத் தரவுகளின்படி ஜூலை மாதத்தில் மட்டும் 1487 சதுர கிலோமீட்டர் அமேசான் காடுகளின் பரப்பளவு அழிவுக்குள்ளாகியுள்ளது. 

அமேசான் காடுகளின் அழிவிற்கு அரசு துணைபோவதாக குற்றம்சாட்டியுள்ள சூழலியல் ஆர்வலர்கள் காடுகள் அழிவைத் தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT