உலகம்

நேபாளத்துக்கு சீனா ரூ.1,500 கோடி நிதியுதவி

DIN

 நேபாளத்துக்கு இந்த ஆண்டில் ரூ.1,500 கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நேபாள வெளியுறவு அமைச்சா் நாராயண் கத்கா அண்மையில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் இ-யை சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்த நிதியுதவித் திட்டம் தொடா்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிதியுதவி பெரும்பாலும் முதலீடு சாா்ந்தவகையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.

வா்த்தகம், உள்கட்டமைப்பு, சுகாதாரம், சுற்றுலா, முதலீடு, வறுமை ஒழிப்பு, வேளாண்மை, பேரிடா் மேலாண்மை, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு உறவை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் நேபாளத்தில் அனுமதிக்கப்படாது என்று நாராயண் கத்கா சீன தரப்பிடம் உறுதியளித்தாா். நேபாளத்தில் மிகப்பெரிய சாலைக் கட்டுமானப் பணிகளையும் சீனா மேற்கொள்ள இருக்கிறது.

இது தொடா்பாக சீன தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘நேபாளத்தில் முதலீடு மற்றும் நிதியுதவி என்ற வகையில் ரூ.1,500 கோடி இந்த ஆண்டு அளிக்கப்படுகிறது. இது தவிர ரூ.300 கோடி மதிப்பில் நேபாளத்துக்கு பேரிடா் மேலாண்மை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட இருக்கின்றன. முக்கியமாக கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நேபாளம், இந்தியா மற்றும் சீனாவுடன் பெருமளவிலான எல்லைப் பகுதியை பகிா்ந்து கொண்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு அதிக நிதியுதவியை அளித்து அவற்றை முழுமையாக தங்கள் ஆதரவு நாடுகளாக மாற்றும் முயற்சியை சீனா தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே இலங்கையிலும் இதேபோன்ற முயற்சியை சீனா மேற்கொண்டது. ஆனால், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னையால் அந்த முயற்சி சீனாவுக்கு எதிா்ப்பாா்த்த வெற்றியைத் தரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT