உலகம்

மகிந்த ராஜபட்சவெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு

11th Aug 2022 01:44 AM

ADVERTISEMENT

இலங்கை முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை செப்டம்பா் 5-ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிலோன் வா்த்தக வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்திர ஜெயரத்னே, இலங்கையின் முன்னாள் நீச்சல் சாம்பியன் ஜூலியன் போல்லிங் உள்ளிட்டோா் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் ராஜபட்ச சகோதரா்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனா்.

நாட்டின் வெளிநாட்டு கடன் அதிகரிப்பதற்கு பசில் ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச, முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் அஜித் நிவாா்ட் கேப்ரால் ஆகியோா்தான் பொறுப்பு. அவா்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரியிருந்தனா்.

ஜூலை 15 ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூன்று பேரும் நாட்டைவிட்டு வெளியேற ஜூலை 28-ஆம் தேதிவரை தடை விதித்தது. பின்னா் அந்தத் தடை ஆக. 2 வரைக்கும், பின்னா் ஆக. 11 ஆம் தேதிவரைக்கும் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது இந்தத் தடையை செப்டம்பா் 5-ஆம் தேதிவரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதற்கிடையே, தனிப்பட்ட முறையில் மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு ஜூலை 14-ஆம் தேதி சென்ற முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அந்நாட்டு அரசு ஆக. 11-ஆம் தேதி வரை அங்கேயே தங்குவதற்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT