உலகம்

கோத்தபய ராஜபட்ச தாய்லாந்தில் தஞ்சம்?

10th Aug 2022 03:01 PM

ADVERTISEMENT

 

சிங்கப்பூரில் உள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து ஜூலை 14-ஆம் தேதி அவா் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு சென்றாா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: இலங்கை: போராட்ட பகுதியிலிருந்து வெளியேற மக்கள் முடிவு

அங்கிருந்து தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்வதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா்.

இதையடுத்து முன்னாள் அதிபர்  கோத்தபயவுக்கு 14 நாள்கள் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, இரண்டு வாரங்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தபய ராஜபட்சவின் விசா நாளை ஆகஸ்ட் 11 ஆம் தேதியிடன் முடிவடைவதால், அவர் மீண்டும் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் குடும்பத்தினருடன் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT