உலகம்

டெஸ்லா பங்குகளை ரூ.55,000 கோடிக்கு விற்கும் எலான் மஸ்க்

DIN

எலான் மஸ்க் ரூ.55,000 கோடி அளவிலான டெஸ்லா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், ட்விட்டா் நிறுவனத்தை வாங்குவதற்கு அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டாா்.

கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி ரூ.3,42,000 கோடி (44 பில்லியன் அமெரிக்க டாலா்) மதிப்பில் ட்விட்டரை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக இருந்தாா்.

அதனைத் தொடர்ந்து, ட்விட்டா் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் குறித்த முழு புள்ளிவிவரம், புதிய போலிக் கணக்குகள் உருவாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தாா்.

ட்விட்டரில் 5 சதவீதத்துக்கும் குறைவான போலி கணக்குகள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து வந்தது. ‘இந்த எண்ணிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை, இதற்கு உரிய தரவுகள் வேண்டும்’ எனக் கூறி ஒப்பந்தத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்தாா். ‘ட்விட்டரில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேலாகவே போலிக் கணக்குகள் இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை, 5 சதவீதத்திற்கு குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்றால், அதற்கான ஆதாரத்தை ட்விட்டா் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று எலான் மஸ்க் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை ட்விட்டா் ஏற்கவில்லை. சிஇஓ அதைச் செய்யாதவரையில் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது’ என்றும் எலான் மஸ்க் கூறினாா்.

இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்குக்கு ட்விட்டர் நிறுவனத்தை விற்பது தொடர்பாக தன் பங்குதாரர்களிடையே பொது வாக்கெடுப்பை நடத்த அந்நிறுவனம் முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில், எலான் மஸ்க் 7 பில்லியன் டாலர் அளவிற்கு (ரூ.55,000 கோடி) தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரில், எலான் மஸ்க்கிடம் இச்செய்தி உண்மையா? என ஒருவர்  கேட்டதற்கு அவர், ‘ஆம். ட்விட்டர் ஒப்பந்தத்தை முடிப்பதற்கு அவரசப்படுத்தினால் (அப்படி நடக்க சாத்தியமில்லை),  என் பங்குதாரர்கள் கடைசி நேரத்தில் வரவில்லை என்றால், அப்போது டெஸ்லா பங்குகளை அவசரமாக விற்பதைத் தவிர்ப்பது முக்கியம்’ என பதிலளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT