உலகம்

தென் கொரியாவில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை: 7 பேர் பலி

9th Aug 2022 12:12 PM

ADVERTISEMENT

 

தென் கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் 7 பேர் பலியாகியுள்ளனர். 

கனமழைக்கு வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் சுரங்கப் பாதை நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும், 6 பேர் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

சியோலின் சில பகுதிகள் மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் தலைநகரைச் சுற்றியுள்ள கியோங்கி மாகாணத்தில் திங்கள்கிழமை இரவு மணிக்கு 100 மி.மீ அதிகமான கனமழை பெய்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 141.5 மிமீ மழைப்பொழிவைத் தாண்டியது. இது 1942-க்குப் பிறகு அதிக மழை பொழிவாகும். 

படிக்க: தெலங்கானா மாநில பாஜக தலைவர் மரணம்! தற்கொலையா?

வியாழன் வரை தலைநகர் பகுதியில் 300 மி.மீ வரை அதிக மழை பெய்யும் என்று கொரியா வானிலை நிர்வாகம் கணித்துள்ளது. ஜியோங்கியில் 350 மிமீ மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழைக்கு உயிரிழந்த ஏழு பேரில் 5 பேர் சியோலில் இருந்தும், மீதமுள்ள இருவர் கியோங்கியில் இருந்தும் பதிவாகியுள்ளன. தலைநகரில் 4 பேரும்,  மாகாணத்தில் இருவரும் காணாமல் போயுள்ளனர். 

கியோங்கியில் ஒன்பது பேர் காயமடைந்தனர் மற்றும் தலைநகர் பகுதியில் உள்ள 107 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் தங்கள் வீடுகளை இழந்து பள்ளிகள் மற்றும் முகாம்களில் தஞ்சமடைந்தனர். 

சியோல், இஞ்சியோன் உள்ளிட்ட எட்டு ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் சில ரயில்வே மற்றும் சுரங்கப்பாதை பிரிவுகளில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 

கொரியா வனச் சேவை நாடு முழுவதும் உள்ள 47 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலச்சரிவு ஆலோசனைகளை வழங்கியது, இதில் சியோலில் உள்ள ஒன்பது மாவட்டங்கள், இஞ்சியோனின் சில பகுதிகள், கியோங்கி, கேங்வான் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு சுங்சியோங் மாகாணங்கள் அடங்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT