உலகம்

பாகிஸ்தானில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் இல்லை

8th Aug 2022 03:51 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்குவதற்கு அதிகாரிகள் தேசிய அடையாள அட்டை கேட்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளதுள்ளனர்.  

தேசிய பேரழிவு மேலாண்மை வாரியம் (பிடிஎம்ஏ) தகவலின் படி 18,087 வீடுகள் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதாகவும் தொலை தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 16 பாலங்கள், 670 கி.மீ.க்கு சாலைகள் பழுதடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

பலுசிஸ்தானில் வழக்கமான மழைப்பொழிவை விட 600 சதவிகிதமும், சிந்து மாகாணத்தில் 500 சதவிகிதம் அதிகமான அளவில் மழை பொழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

கடந்த வெள்ளிக்கிழமை 46,200 வீடுகள் சேதமடைந்ததாக என்டிஎம்ஏ அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தாண்டின் சராசரி மழைப்பொழிவை விட பலுசிஸ்தானில் மட்டும் 305 சதவிதம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வெள்ளத்தில் பெரும்பாலான மக்களது உடைமைகள் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளுக்கு  தேசிய அடையாள அட்டை கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதைப்பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என மக்கள் வேதனை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரு சிலரது அடையாள அட்டை மட்டுமே எங்களிடமிருக்கிறது. மீதியெல்லாம் வெள்ளத்தில் அடித்து சென்றது. அதிகாரிகள் அட்டை இல்லாமல் உணவுப் பொருள்களை வழங்க மறுக்கின்றனரென பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT