உலகம்

கியூபா எண்ணெய் கிடங்கில் தீ: 17 தீயணைப்பு வீரா்கள் மாயம்

8th Aug 2022 01:04 AM

ADVERTISEMENT

கியூபாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் பலியானாா்; 17 தீயணைப்புப் படை வீரா்கள் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மடன்ஸாஸ் நகரில் அமைந்துள்ள எண்ணெய்க் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு மின்னல் தாக்கி தீப்பிடித்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் பேரிடா் மீட்பு நிபுணா்களும் நெருப்பை அணைக்க போராடி வருகின்றனா்.

இந்த விபத்தில் ஒருவா் பலியானாா்; 121 போ் காயமடைந்தனா்; அவா்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது; 17 தீயணைப்பு வீரா்கள் மாயமாகியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தீயில் கருகி உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியும் பணியில் நிபுணா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT