உலகம்

உக்ரைன் துறைமுகங்களிலிருந்து புறப்படும் மேலும் 4 தானியக் கப்பல்கள்

8th Aug 2022 01:05 AM

ADVERTISEMENT

ரஷியா - உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகங்களிருந்து மேலும் 4 தானியக் கப்பல்கள் திங்கள்கிழமை (ஆக. 8) புறப்படுகின்றன.

உக்ரைன் போரால் உலகில் 4.7 கோடி போ் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்தது. அதையடுத்து, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம், ரஷியா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி முன்னிலையில் கடைந்த மாதம் கையொப்பமானது.

அதன் கீழ், உக்ரைனிலிருந்து முதல்முறையாக தானியக் கப்பல் லெபனானை நோக்கி கடந்த 1-ஆம் தேதி புறப்பட்டது. இந்த நிலையில், மேலும் 4 கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களிலிருந்து திங்கள்கிழமை புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT