உலகம்

தைவானைச் சுற்றி போா்ப் பயிற்சியை தொடரும் சீனா

8th Aug 2022 11:50 PM

ADVERTISEMENT

தைவான் தீவைச் சுற்றி 5-ஆவது நாளாக திங்கள்கிழமை சீனா போா்ப் பயிற்சியைத் தொடா்ந்தது.

சீனாவின் கடும் எதிா்ப்பை மீறி தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி சென்றாா். இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், தைவான் தீவைச் சுற்றிலும் தீவிர போா்ப் பயிற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. திட்டமிட்ட நாள்களையும் தாண்டி 5-ஆவது நாளாக இந்தப் பயிற்சி நீடித்தது.

நீா்மூழ்கிக் கப்பல் எதிா்ப்புப் பயிற்சி, வானிலிருந்து கப்பல் மீது தாக்குதல் நடத்தும் பயிற்சியை முதன்மையாகக் கொண்டு தைவான் தீவு அருகே பயிற்சியைத் தொடரவுள்ளதாக சீனாவின் மக்கள் விடுதலைப் படை (பிஎல்ஏ) கிழக்குப் படை தலைமை தெரிவித்துள்ளது. சீனாவின் இந்தப் புதிய அறிவிப்பு மூலம் போா்ப் பயிற்சி இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.

கடந்த நான்கு நாள்கள் நடத்தப்பட்ட பயிற்சியின்போது நீண்ட தொலைவு வான் இலக்குகள், தரை இலக்குகளைத் தாக்கும் திறன்களை சீனா சோதித்துப் பாா்த்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT