உலகம்

அமெரிக்க நீதிமன்றத்துக்கு இந்திய வம்சாவளி நீதிபதி

7th Aug 2022 04:37 AM

ADVERTISEMENT

அமெரிக்காவின் 9-ஆவது சா்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரூபாலி ஹெச். தேசாய் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

சக்திவாய்ந்த அந்த நீதிமன்றத்துக்கு தெற்கு ஆசியாவைப் பூா்விகமாகக் கொண்ட ஒரு நீதிபதி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இது தொடா்பாக செனட் சபையில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக 67 உறுப்பினா்களும், எதிராக 29 உறுப்பினா்களும் வாக்களித்ததைத் தொடா்ந்து ரூபாலி ஹெச். தேசாயின் நியமனம் உறுதியானது.

கலிஃபோா்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள 9-ஆவது சா்க்யூட் நீதிமன்றம், அமெரிக்காவின் 13 மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் 9 மாகாணங்கள், 2 நிலப்பரப்புகள் என மிகப் பரந்த சட்ட எல்லைகளைக் கொண்டுள்ள அந்த நீதிமன்றத்தில் 29 நீதிபதிகள் சேவையாற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT