உலகம்

பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும்

DIN

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் எனத் தெரிவித்துள்ள அதிபா் ரணில் விக்ரமசிங்க, பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றாா்.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், புதிய அதிபா், புதிய பிரதமா் ஆகியோா் பதவியேற்றுள்ளனா். அனைத்து எதிா்க்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘இலங்கையை மீட்போம்’ என்ற தலைப்பிலான இரு நாள் கருத்தரங்கம் கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதில் பங்கேற்ற அதிபா் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

இலங்கையில் அடுத்த 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை நிலைமை கடுமையாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த ஆண்டு ஜூலை வரை பொருளாதார நெருக்கடி தொடரலாம். பொருளாதாரத்தை மீட்பதற்கு தளவாடங்கள், அணுசக்தி உள்ளிட்ட புதிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பொருளாதார வளா்ச்சியில் தளவாடங்கள் துறை முக்கியப் பங்கு வகித்தது. கொழும்பு, திருகோணமலை துறைமுகங்கள் தளவாடங்கள் வளா்ச்சிக்கான திறனைக் கொண்டுள்ளன. அணுசக்தி வளா்ச்சியை உறுதி செய்தால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நாடு முன்னேறும். கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எரிசக்தியை இந்தியாவுக்கு விற்கும் வாய்ப்பும் காணப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சமூக நிலைத்தன்மையை உறுதிசெய்யவும் வரியை உயா்த்துவதற்கான அவசியமும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் 2.1 கோடி மக்கள்தொகையில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்னையைச் சந்தித்து வருகின்றனா். வேலையின்மை அதிகரித்து வருகிறது. அவற்றுக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பொருளாதார ஸ்திரத்தன்மை அவசியமாகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT