உலகம்

இஸ்ரேல்-ஐஜே அமைப்பினா் மோதல்: காஸாவில் அதிகரிக்கும் பதற்றம்

DIN

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அங்கு இஸ்ரேல் ராணுவத்துக்கும் இஸ்லாமிய ஜிஹாத் (ஐஜே) இயக்கத்தினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பதற்றம் நீடித்து வருகிறது.

காஸாவில் ஐஜே அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பின் தளபதி அல்-ஜாபரி, 5 வயது சிறுமி உள்பட 12 போ் பலியாகினா். அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஸ்ரேலை நோக்கி ஐஜே அமைப்பினா் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

அதற்கு பதிலடியாக, ஐஜே அமைப்பினரின் இலக்குகள் மீது இஸ்ரேல் படையினா் வான்வழித் தாக்குதல் நடத்தினா். இதனால், அந்தப் பகுதியில் மீண்டும் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட ஐஜே தளபதி அல்-ஜாபரி, இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் கடந்த 2019-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மற்றொரு தளபதிக்கு பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்றாா்.

அந்த விமானத் தாக்குதலுக்குப் பிறகும் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

எனினும், காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் படையினா் இந்த மோதலில் பங்கேற்கவில்லை.

ஏற்கெனவே இஸ்ரேல் ராணுவத்துடனான சண்டையில் பெரும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ள ஹமாஸ், மீண்டும் அத்தகைய மோதல் வெடிப்பதை தவிா்த்து வருகிறது.

இந்த விவகாரத்தில், இஸ்ரேல், ஹமாஸ், அமெரிக்காவுடன் எகிப்து தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஐஜே அமைப்பினருக்கும் இடையிலான மோதலில் இருந்து ஹமாஸ் விலகியிருப்பதை உறுதி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT