உலகம்

அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்; நீதி வழங்கப்பட்டது: ஜோ பைடன்

2nd Aug 2022 08:04 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குக் காரணமான அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

தனது வழிகாட்டுதலின்படி, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் அமிர் ஐய்மன் அல்-ஜவாஹிரி சனிக்கிழமை வான்வழி தாக்குதலின் மூலம் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டதாக திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜோ பைடன் அறிவித்தார்.

இதையும் படிக்க | பென்சில் கேட்டால் அம்மா அடிக்கிறார்: விலை உயர்வு குறித்து மோடிக்கு சிறுமி கடிதம்

பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இதற்கு எத்தனை காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது அவசியமில்லை, நீங்கள் எங்கே ஒளிந்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, எங்கள் நாட்டு மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அமெரிக்கப் படைகள் உங்களை கண்டுபிடித்து கொல்லும் என்றும் பைடன் கூறினார்.

இதையும் படிக்க | மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை வன்கொடுமைக்குள்ளாகி.. தற்போது புதிய அவதாரம்

ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அமெரிக்க அதிபர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அல் கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் என்று கண்டறியப்பட்ட ஐய்மான் அல்-ஜவாஹிரியை, அதிமுக்கிய பங்கரவாதிகள் பட்டியலில் இணைத்து, அமெரிக்கப் படைகள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேடி வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT