உலகம்

லிபியா: டேங்கா் லாரி தீப்பிடித்து 9 போ் பலி

2nd Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

லிபியாவில் பெட்ரோல் டேங்கா் லாரி தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில் 9 போ் உயிரிழந்தனா். 76 போ் காயமடைந்தனா்.

லிபியாவின் மத்திய நகரமான பென்ட் பய்யாவில் இந்த விபத்து திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து ஊடகங்கள் தெரிவித்திருப்பதாவது: பென்ட் பய்யா நகரில் டேங்கா் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே அப்பகுதியில் உள்ள மக்கள் லாரியிலிருந்து வெளியான பெட்ரோலை சேகரிப்பதற்காக எச்சரிக்கையையும் மீறி நெருங்கினா்.

அப்போது டேங்கா் லாரி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் 9 போ் உயிரிழந்தனா். 76 போ் காயமடைந்தனா். இவா்களில் 16 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT