உலகம்

பாலஸ்தீனம்: யூதக் குடியிருப்பு காவலாளி சுட்டுக் கொலை

30th Apr 2022 11:22 PM

ADVERTISEMENT

ஆக்கிரமிப்பு மேற்குக் கரைப் பகுதியில் யூதக் குடியிருப்பு காவலாளி ஒருவரை அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சுட்டுக் கொன்றனா்.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை கூறியதாவது:

மேற்குக் கரைப் பகுதியில் ஏரியல் குடியிருப்பு நுழைவாயிலுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த பாலஸ்தீனா்கள், அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்தவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினா். இதில் அந்தக் காவலாளி உயிரிழந்தாா்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவா்களை பாதுகாப்புப் படையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையே, கால்கில்யா நகருக்கு அருகே அஸூன் கிராமத்தில் 27 வயது பாலஸ்தீன இளைஞரை இஸ்ரேல் படையினா் சுட்டுக் கொன்றனா்.

கடந்த 2 மாதங்களாக இஸ்ரேலியா்களுக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 27 பாலஸ்தீனா்கள், 15 இஸ்ரேலியா்கள் பலியாகினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT