உலகம்

சாக்லெட் சாப்பிடுவதால் பரவும் சால்மோனெல்லா நோய்: எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

29th Apr 2022 11:26 AM

ADVERTISEMENT


புது தில்லி: பிரிட்டனில், 150-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் பகுதியில் தொற்றினை ஏற்படுத்தும் சால்மோனெல்லா வகை பாக்டீரியா பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் மோனோபாசிக் சால்மோனெல்லா தைபிமுரியம் பாக்டீரியாவின் 34வது உருமாறிய தொற்று பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க.. சால்மோனெல்லா நோய் என்றால் என்ன? எப்படி பரவும்?

இந்த தொற்று பரவி வருவதற்கான காரணிகளை ஆராய்ந்த போது, பெல்ஜியம் சாக்லேட்கள் மூலம் இந்த பாக்டீரியா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற சாக்லேட்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பெல்ஜியம் சாக்லேட். பெல்ஜியத்திலிருந்து சுமார் 113 நாடுகளுக்கு இந்த சாக்லேட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

ADVERTISEMENT

இந்த வகை பாக்டீரியா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்குக் கீழ் உடையவர்கள் என்றும், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக பெல்ஜியம் சாக்லேட்டுகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்வரை, உலக நாடுகளில் இந்த தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இதையும் படிக்க.. பயணிக்கு நெஞ்சுவலி: உயிர் காக்க ஓட்டுநர் எடுத்த முடிவு; குவியும் பாராட்டு

பெல்ஜியத்தில் உள்ள அர்லோன் நகரில் செயல்பட்டு வரும் சாக்லேட் தொழிற்சாலையின் மோர் கலக்கும் மிகப்பெரிய தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கண்டறியப்பட்ட சால்மோனெல்லா பாக்டீரியாவுடன், தற்போது மனிதர்களிடையே பரவியிருக்கும் பாக்டீரியா மிகச் சரியாக ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT