உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 51.22 கோடியைக் கடந்தது

29th Apr 2022 11:16 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் எண்ணிக்கை 62,56,570 ஆகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 11,33,48,17,928 ஆக அதிகரித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் 226 நாடுகளுக்கும் மேல் கரோனா தொற்று பரவி அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் கடைப்பிடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த சிறார்கள் முதல் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 51,22,54,927 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 62,56,570 போ் உயிரிழந்துள்ளனர்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 46,60,77,512 போ் பூரண குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 99 லட்சத்து 20 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 8,29,54,768    -ஆகவும் பலி எண்ணிக்‍கை 10,20,159-ஆகவும்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 8,06,23,433-ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,30,72,486-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,23,753 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,04,18,920-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,63,289     பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

1 கோடிக்கும் அதிகமான பாதிப்புகள் உள்ள மற்ற நாடுகள் விவரம்: பிரான்ஸ் (28,733,187), ஜெர்மனி (24,609,159), இங்கிலாந்து (22,201,281), ரஷ்யா (17,902,334), தென் கொரியா (17,144,065), இத்தாலி (17,144,065), 783,6890, 683,6890, 683,6890, 683,890 , ஸ்பெயின் (11,833,457) மற்றும் வியட்நாம் (10,6338,632).

உயிரிழப்பில் பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புகள் உள்ள நாடுகள்: ரஷியா (368,011), மெக்சிகோ (324,221), பெரு (212,778), இங்கிலாந்து (175,330), இத்தாலி (163,1754), இந்தோனேசியா (163,1754) 100,000 க்கும் அதிகமான இறப்பு எண்ணிக்கை கொண்ட நாடுகள். , பிரான்ஸ் (146,748), ஈரான் (141,058), கொலம்பியா (139,785), ஜெர்மனி (135,078), அர்ஜென்டினா (128,542), போலந்து (116,022), ஸ்பெயின் (104,227) மற்றும் தென் ஆப்பிரிக்கா (100,355) பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 

இதையும் படிக்க | சென்னை ஐஐடியில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: மேலும் 11 பேருக்கு கரோனா

ADVERTISEMENT
ADVERTISEMENT