உலகம்

மாஸ்கோவில் ஐ.நா. பொதுச் செயலா்

27th Apr 2022 02:25 AM

ADVERTISEMENT

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் ரஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தலைநகா் மாஸ்கோவில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவை செவ்வாய்க்கிழமை சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், உக்ரைன் மக்களின் இன்னல்களைக் களைவதற்கு ஐ.நா.வுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக லாவ்ரோவ் தெரிவித்தாா்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, அவா் உக்ரைன் தலைநகா் கீவுக்குச் சென்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் வியாழக்கிழமை (ஏப். 28) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

 

ADVERTISEMENT

Tags : ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT