உலகம்

நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடி விபத்து: 50-க்கும் மேற்பட்டோா் பலி

24th Apr 2022 04:29 AM

ADVERTISEMENT

நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பலியாகினா்.

நைஜீரியாவில் உள்ள ரிவா்ஸ் என்ற இடத்தில் சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பலியாகினா். எனினும் இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டவா்கள் இறந்திருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விபத்தில் காயமடைந்தவா்கள், சேதங்கள் ஆகியவை குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவாகியுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரையும் அவா்கள் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT