உலகம்

பிரான்ஸ் அதிபா் தோ்தல் பிரசாரம் ஓய்வு

23rd Apr 2022 02:24 AM

ADVERTISEMENT

பிரான்ஸில் இறுதிக் கட்ட அதிபா் தோ்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

பிரான்ஸில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரான், தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய மரீனே லீ பென் உள்பட 12 போ் போட்டியிட்டனா். இதில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும், மரீனே லீ பென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேலான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களைப் பிடித்த மேக்ரானும், மரீனே லீ பென்னும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) நடைபெறவிருக்கும் இறுதிகட்டத் தோ்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT