உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போா் ஒரு தொடக்கம்தான். அடுத்து பிற நாடுகளையும் கைப்பற்ற ரஷியா்கள் முனைவாா்கள்’ என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.
தெற்கு உக்ரைனைக் கைப்பற்றி, மால்டோவா நாட்டிலுள்ள கிளா்ச்சியாளா் பகுதிக்கு இணைப்பு ஏற்படுத்தப்போவதாக ரஷிய படைப் பிரிவு தளபதி ஒருவா் கூறியதைத் தொடா்ந்து ஸெலென்ஸ்கி இவ்வாறு எச்சரித்தாா்.