உலகம்

டிவிட்டரை ரூ.3.10 லட்சம் கோடிக்கு வாங்க எலான் மஸ்க் திட்டம்

14th Apr 2022 04:48 PM

ADVERTISEMENT

 

டிவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரை உலகின் நெ.1 பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை  வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதை மறுத்த எலான், தற்போது 41 பில்லியன் டாலருக்கு (தோராயமாக ரூ.3.15 லட்சம் கோடி) டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT