உலகம்

உக்ரைன் போரில் 186 குழந்தைகள் பலி; 344 பேர் காயம்

12th Apr 2022 05:57 PM

ADVERTISEMENT

உக்ரைன் போரில் இதுவரை 186 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை தாக்கி அழித்துள்ள ரஷியப்படை தரப்பிலும் மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் மீது ரஷியப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. கீவ் நகரில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், உக்ரைன் போரில் பலியான குழந்தைகளின் 
எண்ணிக்கை 186 யை எட்டியுள்ளது. மேலும், 344 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க | ரஷியா-உக்ரைன் பேச்சு அமைதிக்கு வழிவகுக்கும்: பைடனிடம் பிரதமா் மோடி

ADVERTISEMENT
ADVERTISEMENT