உலகம்

புத்தாண்டு: இலங்கையை அடைந்தது இந்தியாவின் 11 ஆயிரம் டன் அரிசி

12th Apr 2022 12:45 PM

ADVERTISEMENT


கொழும்பு: இலங்கை நாட்டு மக்களுக்கு சற்று நிம்மதி தரும் வகையில், புத்தாண்டு கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு இந்தியா அனுப்பிய 11 டன் அரிசி, இன்று கொழும்பு சென்றடைந்தது.

சென் குளோரி என்ற கப்பல் மூலமாக இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 11 ஆயிரம் டன் அரிசி, கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்ததாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை

வழக்கமாக இலங்கையில் அமாவாசை நாளை கணக்கிட்டு, ஏப்ரல் 13 அல்லது 14ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்படும். 

ADVERTISEMENT

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து பல்வேறு திட்டங்கள் வழியாக இதுவரை 16 ஆயிரம் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு  இந்தியா தரப்பில் எரிபொருள், காய்கறிகள், அத்தியாவசியப் பொருள்கள், மருந்து உள்ளிட்ட பல உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT