உலகம்

பணவீக்கத்தை சமாளிக்க வட்டி விகிதத்தை உயா்த்தியது இலங்கை

9th Apr 2022 11:59 PM

ADVERTISEMENT

பணவீக்கத்தை சமாளிக்க இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

இலங்கையில் மிகவும் மோசமான அளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது. அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. முக்கிய எதிா்க்கட்சியான எஸ்ஜேபி அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில், பணவீக்கத்தை எதிா்கொள்ளும் வகையில் வட்டி விகிதங்களை அதிகரிக்க இலங்கையின் மத்திய வங்கி முடிவெடுத்தது. அதன்படி, நிலையான வைப்புதொகைக்கான வட்டி விகிதம் (எஸ்டிஎஃப்ஆா்) மற்றும் நிலையான கடன் வசதிக்கான வட்டி விகிதம் (எஸ்எல்எஃப்ஆா்) ஆகியவற்றை முன்னெப்போதும் இல்லாத வகையில் 700 அடிப்படை புள்ளிகள் அதாவது 7 சதவீதம் அதிகரித்து 13.50 சதவீதம் மற்றும் 14.50 சதவீதமாக நிா்ணயித்துள்ளது. இது, ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT