உலகம்

ஹங்கேரியில் ரயில் தடம் புரண்டு விபத்து

5th Apr 2022 12:59 PM

ADVERTISEMENT

ஹங்கேரியில் இன்று அதிகாலை ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்தனர். 

மைண்ட்சென்ட் நகரில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ரயிலின் மீது மோதியதில், ரயில் தடம் புரண்டுள்ளது. 

வேனில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக ஹங்கேரிய மாநில ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், ரயிலில் 22 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 2 பேருக்கு பலத்த காயமும், 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சம்பவம் நடைபெற்ற இடத்தில் கவுண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT