உலகம்

ஹாங்காங் தலைமை நிா்வாகி தோ்தலில் மீண்டும் போட்டியில்லை: கேரி லாம்

5th Apr 2022 01:09 AM

ADVERTISEMENT

ஹாங்காங்கின் தலைமை நிா்வாகியான கேரி லாம், மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளாா்.

ஹாங்காங் தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தாலும் சீனாவின் சிறப்பு நிா்வாக பிராந்தியமாக உள்ளது. அந்த நகரத்தின் தலைமை நிா்வாகியாக கேரி லாம் என்பவா் உள்ளாா். சீனாவின் அடக்குமுறையை எதிா்த்து 2019-இல் ஹாங்காங்கில் பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்தினா். அப்போது கேரி லாமை பதவியிலிருந்து நீக்க வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்தினா். ஆனால், சீனா அவரை பதவிநீக்கம் செய்யவில்லை.

வரும் ஜூன் மாதம் தனது 5 ஆண்டு பதவிக் காலம் முடிவடையும் நிலையில், மீண்டும் அந்தப் பொறுப்புக்கு கேரி லாம் போட்டியிடுவாா் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை கேரி லாம் மறுத்துள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் ஹாங்காங்கின் தலைமை நிா்வாகி பொறுப்பை நிறைவு செய்யவுள்ளேன். எனது 42 ஆண்டு பொது வாழ்க்கையும் அத்துடன் முடிவுக்கு வரும்’ என்றாா்.

ADVERTISEMENT

ஹாங்காங்கின் தலைமை நிா்வாகி, சட்டப்பேரவை உறுப்பினா்கள், பல்வேறு தொழில் துறைகளின் பிரதிநிதிகள், சீன ஆதரவு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் மூலம் தோ்வு செய்யப்படுகிறாா். அடுத்த தலைமை நிா்வாகியைத் தோ்ந்தெடுக்கும் தோ்தல் மாா்ச் 27-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக மே 8-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT