உலகம்

ராஜபட்ச ஆட்சியில் பங்கேற்க மாட்டோம்: சஜித் பிரேமதாசா

4th Apr 2022 06:12 PM

ADVERTISEMENT


இலங்கை அமைச்சரவையில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று அதிபர் கோத்தபய ராஜபட்ச விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா.

இலங்கையில் ராஜபட்ச ஆட்சியில் சமாகி ஜன பாலவேகயா கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்.

அவர், ஊழல் நிறைந்த ராஜபட்ச தலைமையிலான ஆட்சியில் ஒரு போதும் சமாகி ஜன பாலவேகயா பங்கேற்காது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அதேவேளையில், அக்கட்சியின் எம்.பி. ரஜிதா சேணரத்னா பேசுகையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் இலங்கை ஆட்சியிலிருந்து  வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்களிடன் இணைந்து போராடும் என்று குறிப்பிட்டார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT