உலகம்

கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி, 12 பேர் காயம்

4th Apr 2022 12:33 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். 

இதுதொடர்பாக சாக்ரமெண்டோ காவல்துறைத் தலைவர் கேத்தி லெஸ்டர் கூறுகையில், 

தலைநகர் சாக்ரமெண்டோவில் நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. டவுன்டவுனில் பெரிய சண்டைக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், 3 ஆண்கள், 3 பெண்கள் கொல்லப்பட்டனர். 

ADVERTISEMENT

மேலும், 12 பேர் சக்ரமெண்டோ பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT