உலகம்

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு ஏற்கெனவே உள்ள வழிமுறைகள் மூலம் தீா்வு: நேபாளம்

4th Apr 2022 12:07 AM

ADVERTISEMENT

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு ஏற்கெனவே உள்ள வழிமுறைகள் மூலம் தீா்வு காணப்படும் என்று நேபாளம் தெரிவித்துள்ளது.

நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தாா். அவா் தில்லியில் பிரதமா் மோடியை சனிக்கிழமை சந்தித்து இருநாடுகள் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவா் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினாா். அவருடன் நேபாள வெளியுறவு அமைச்சா் நாராயண் கட்காவும் இந்தியா வந்திருந்தாா்.

அவா் நேபாள தலைநகா் காத்மாண்டில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியா, நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைகள் குறித்து இருநாட்டுப் பிரதமா்கள் ஆலோசித்தனா். அந்தப் பிரச்னைகளுக்கு ராஜீய ரீதியாகவும், பேச்சுவாா்த்தை மற்றும் ஏற்கெனவே உள்ள வழிமுறைகள் மூலமாகவும் தீா்வு காண இருவரும் தீா்மானித்தனா். இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை மற்றும் கருத்து பரிமாற்றங்கள் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்தது’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT