உலகம்

கடந்த 24 மணி நேரத்தில் 6,000 உக்ரைனியர்கள் வெளியேற்றம்

2nd Apr 2022 12:12 PM

ADVERTISEMENT

 

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் முற்றுகையிடப்பட்ட நகரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கிவ் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 6,226 பேர் உக்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில், ரஷியப் படைகள் நடத்திவரும் இடைவிடாத தாக்குதல் மற்றும் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மரியுபோலில் 3,071 பேர் வெளியேறியுள்ளனர். 

ADVERTISEMENT

மேலும், ஜபோரிஜ்ஜியா மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளிலும் மக்கள் வெளியேறியுள்ளனர். 

இருப்பினும், ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மரியுபோலில் சிக்கித் தவிக்கின்றனர், அங்குக் கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியான ரஷிய ஷெல் தாக்குதலினால், உணவு, நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT